சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கடந்த 27 மே 2018 அன்று அல் ஜசீரா ஒளிபரப்பிய ‘கிரிக்கெட்டின் மேட்ச் ஃபிக்ஸர்கள்’ என்ற ஆவணத் தொகுப்பு குறித்த தனது விசாரணையை முடித்துவிட்டதாக இன்றைய நாளில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
போதுமான நம்பகமான சான்றுகள் இல்லாத காரணத்தால்
குறித்த நிகழ்ச்சியில் சம்பந்தப்படுத்தப்பட்ட ஐந்து பேரில் எவருக்கும் எதிராகவும் ஐ.சி.சி ஊழல் தடுப்பு பிரிவினரால் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.சி.சி பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் இது தொடர்பில் தெரிவிக்கையில் “எங்கள் விளையாட்டில் இத்தகைய நடத்தைக்கு இடமில்லை என்பதால் கிரிக்கெட்டுக்குள் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவதை நாங்கள் ஆராய்ந்தோம், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தக்கவைக்க போதுமான சான்றுகள் இல்லை என்பது முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை வீரர்கள் சிலரை தொடர்புபடுத்தி அல் ஜசீரா தொலைக்காட்சியினால் ஆவணப்படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது, டில்ஹார லோகுகெட்டிக்கே உள்ளிட்ட சிலருக்கு எதிராக தடை வித்திக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே இலங்கை கிரிக்கெட்டில் எதுவித ஊழல் சம்பவங்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாதுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.