இலங்கை கிரிக்கெட்டிலிருந்து திடீர் விலகலை அறிவித்த முன்னாள் வீர்ர்.…!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவில் இருந்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம விலகியுள்ளார்.

ரொஷான் மஹாநாம தனிப்பட்ட காரணங்களுக்காக குழுவிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் அணித்தலைவர் அரவிந்த டி சில்வாவும், முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகளுக்கு ரோஷன் மஹாநாமா மேட்ச் ரெஃப்ரியாக இருப்பார் எனவும் அறியவருகின்றது.

PSL இன் 7வது பதிப்பு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 27 வரை கராச்சி மற்றும் லாகூரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.