1997 இல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான மகேல ஜெயவர்த்தன 2003 உலகக் கிண்ணத் தொடரில் 7 போட்டிகளில் துடுப்பெடுத்தாடி மொத்தமாக 21 ஓட்டங்களைப் பெற்றார். சராசரி வெறும் 3.00.
அதில் இரண்டு அடுத்தடுத்த போட்டிகளில் பூச்சிய பெறுதிகளைப் பெற்றார்.
இந்த மகேலவே பிற்காலத்தில் Master mind என்று உலக கிரிக்கெட் விமர்சகர்களால் போற்றப்படுகின்றார்.
அந்த வகையில் குஷால் மெண்டிஸ் உபதலைவராக நியமிக்கப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி.
2023 உலகக் கிண்ணத்தை இலக்கு வைத்து ஒரு இளம் அணியை தயார்செய்ய நினைத்த தேர்வுக்குழுவுக்கு எனது Salute.??
கருணாரட்ன சிறந்த தலைவராக இருந்தாலும் எதிர்காலத்தை நோக்கிய அணியை கட்டமைக்கும் முகமாக, அவரை அணியில் இருந்து தூக்கியது கூட சிறந்த முடிவு தான்.
ஆனால் புதிய தலைவராக குஷால் பெரேராவை நியமித்ததில் உடன்பாடு இல்லை.
காரணம்:- குஷால் பெரேரா ஒரு injury prone cricketer. கிட்டத்தட்ட அரை ஓய்வுநிலையில் உள்ள வீரர். கடந்த 4 ஆண்டுகளில் 6 தடவைக்கு மேல் காயப்பட்டிருக்கின்றார்.
இவரது தலைமைத்துவம் கூட பெரிதளவில் சிறப்பானதாக இருக்கவில்லை. LPL தொடரில் Kandy Tuskers அணிக்காக தலமைதாங்கி இருந்தார். மிகமோசமான அணித் தெரிவும், பந்துவீச்சு மாற்றங்களும் அமைந்திருந்தது.
பொறுத்திருந்து பார்ப்போம். குஷால்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
DR ஜெய கணேசன்