இலங்கை கிரிக்கெட்டில் சூதாட்டம் ? _ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தகவல்..!
இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டி தொடரின் போது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கையின் பிரபலமான ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கையின் துடுப்பாட்ட வீரர் ஒருவரும் ,சுழற்பந்து வீச்சு வீசும் சகலதுறை ஆட்டக்காரர் ஒருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டது.
இது தொடர்பில் பரவலாக நேற்றைய நாள் முழுவதும் இலங்கையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன, இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது தொடர்பிலான எதுவிதமான ஆதாரங்களும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சூதாட்டம் குறித்ததான கருத்துகளை மறுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஊடக அறிக்கை.