இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹசான் திலகரத்ன மீண்டும் ஸ்ரீ இலங்கை கிரிக்கெட்டில் பயிற்சியாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக திகழ்ந்த ஹசான் திலகரத்ன, இலங்கையின் இளையோர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னர் 2018 -2020 வரை பதவி வகித்திருந்தார்.
இந்தநிலையில் இவரை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இவருடைய பதவிக்காலம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரையான 7 மாதங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
83 டெஸ்ட் போட்டிகளில் 4,545 ஓட்டங்களை 42.87 எனும் சராசரியில் பெற்றுள்ள ஹசான் திலகரத்ன, 200 ஒருநாள் போட்டிகளில் 3789 ஓட்டங்களை 29.60 எனும் சராசரியில் பெற்றிருந்தார்.1996 உலக கிண்ணம் வென்ற அணியிலும் ஹசான் திலகரத்ன இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.