இலங்கை கிரிக்கெட்டில் அண்மைக்காலமாக நடக்கும் மாற்றங்கள் நல்லவிதமாக அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, ஏராளமானா நல்ல விடயங்களை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொண்டுவருகின்றமை சிறப்பமசமே.
இதன் ஓர் அங்கமாக இப்போதைய நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
வருகின்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்கான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது.
ஏற்கனவே கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் அரவிந்த தலைமையில் முரளி, மஹாநாம உள்ளிட்ட 96 ன் உலக கிண்ண நாயகர்களுடன் சங்ககாராவும் பெயரிடப்பட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே சமிந்த வாசின் நியமனமும் அமைந்துள்ளது.
வாஸ் , இலங்கை அணிக்காக 111 போட்டிகளில் 355 டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றியதுடன் 322 ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார் என்பதும் முக்கியமானது.