இலங்கை கிரிக்கெட்டை இப்படியா ச கேவலப்படுத்துவது- கம்ரன் அக்மல் கருத்தால் ரசிகர்கள் சீற்றம் ..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான தொடர் வருகின்ற ஜூலை மாதம் நடைபெறவிருக்கின்ற நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் கருத்து மூலமாக இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தமது அதிருப்தியையும் கோபத்தையும் சமூக வலைத்தளங்களின் வழியே வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் திகதி கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி அதன் பின்னர் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் என்பவற்றில் விளையாடப்போகிறது.

இதன் காரணத்தால் சமகாலத்தில் இலங்கை உடனான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறவிருக்கும் நிலையில், அதற்காக இந்திய கிரிக்கெட் சபை இரண்டாம்தர அணி ஒன்றை தயார் படுத்தும் நிலையிலேயே கம்ரன் அக்மல் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவின் மூன்றாம்தர அணியொன்று இலங்கை சென்றாலும்கூட இலங்கையை வீழ்த்துவதற்கான நிலைமை காணப்படுகிறது என்று கம்ரன் அக்மல் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அவரது இந்த கருத்து தொடர்பில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் பலர், தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தசுன் சானக்க தலைமையிலான இளம் அணியொன்று பாகிஸ்தான் சென்று தொடரை வென்று தங்கள் அணியை மண்கௌவ செய்ததை மறந்து பேசுவதாகவும் ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.