இலங்கை கிரிக்கெட் அகராதியில் மோசமான இரண்டாவது தோல்வி -தொடர் தென்னாபிரிக்கா வசம்..!

இலங்கை கிரிக்கெட் அகராதியில் மோசமான இரண்டாவது தோல்வி -தொடர் தென்னாபிரிக்கா வசம்..!

இலங்கை ,தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியது ,ஆனால் T20 தொடரில் மூன்று போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 3-0 என வென்று அசத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் மிகப் பெருமளவிலான பங்களிப்பு _நல்க தவறியமை இந்தத் தொடர் தோல்விக்கு பிரதானமான காரணமாக கருதப்படுகிறது.

குறிப்பாக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுகளால் போட்டியில் வெற்றிபெற்றது, இலங்கை அணி இதற்கு முன்னர் 10 விக்கெட்டுகளால் தோல்வியை தழுவிய ஒரு சந்தர்ப்பம் கேப்டவுனில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்றது.

 58 பந்துகளில் மீதமிருக்க அந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது, இன்று 32 பந்துகள் மீதமிருக்க போட்டியில் இலங்கை தோல்வியை தழுவியது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால்  மோசமான தோல்வியை தழுவிய இரண்டாவது சந்தர்ப்பமாக இந்த தோல்வி அமைந்தது.