பங்களாதேஷ் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
குஷல் பெரேரா தலைமையில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட சென்றிருக்கும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் சஜீவ வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டும் இவர் விளையாடினாலும் முதல்தர கிரிக்கெட்டில் 22 கால அனுபவம் கொண்டவர்.
192 முதல்தர போட்டிகளில். 816 விக்கட்டுக்களையும் ,157 List A கிரிக்கெட்டில் 207 விக்கட்களையும் சஜீவ வீரக்கோன் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.