இலங்கை கிரிக்கெட் அணிக்கு வந்த இன்னுமொரு நெருக்கடி_ முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் உபாதையால் அவதி..!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு வந்த இன்னுமொரு நெருக்கடி_ முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் உபாதையால் அவதி..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கான இலங்கையின் இறுதிப்படுத்தப்பட்ட இருபத்து நான்கு வீரர்கள் கொண்ட பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் இடம்பிடித்த இலங்கையில் உதவி தலைவர் தனஞ்செய டி சில்வா உபாதைகளால் அவதி படுவதாக பிந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

இவர் முதுகெலும்பு உபாதைகளால் அவதிப்படுவதன் காரணத்தால் சிடி ஸ்கேன் மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குசல் பெரேரா தோள்பட்டை உபாதையால் அவதிப்படுகிறார், இது மாத்திரமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னான்டோ கணுக்கால் உபாதையால் அவதிப்பட்டு வரும் நிலையில், இன்னும் ஒரு முக்கிய வீர்ர் தனஞ்சய டி சில்வா உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றமையும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருத்த கவலையை தோற்றுவித்துள்ளது.

 இவரால் போட்டிகளில் விளையாட முடியுமா என்பது தொடர்பான தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தவான் தலைமையிலான இந்திய அணியை தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணி ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.