இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் மற்றும் முன்னணி துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கும் கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை அடுத்து, இலங்கை அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் சுற்றுலாவுக்கு தயாராகி வரும் நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் மொயின் அலி இலங்கை சுற்றுலா மேற்கொண்ட தருணத்தில் கொரோனா தாக்கத்துக்கு இலக்காகியிருந்தார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.