இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிப்பது குறித்து srilanka cricket விசேட கவனம் செலுத்தியுள்ளது.
தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க கிறிஸ் சில்வர்வுட் உடனான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது srilanka cricket.
ஆஷஸ் தொடருக்குப் பிறகு அவர் சமீபத்தில் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தப் பின்னணியிலேயே, srilanka cricket கிறிஸ் சில்வர்வுட் உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட மிக்கி ஆதர் கடந்த டிசம்பரில் தன்னுடைய பதவியிலிருந்து விலகிக் கொண்ட நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கை கிரிக்கட் தரப்பு இன்னும் ஒருவரை நியமிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் பலர் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இறுதியாக சில்வர்வூட்டுடனான பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தரப்பு ஆரம்பித்துள்ளது.
நவீத் நவாஸ் இலங்கையின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வரலாம் என்றும் செய்திகள் முன்னர் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.