இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தசுன் சானாக…!
இலங்கை கிரிக்கெட் அணியின் T20 போட்டிகளுக்கான புதிய தலைவராக தசுன் சானாக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அணித்தலைவர் மாலிங்க அண்மைக் காலமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை, அத்தோடு உடல்தகுதி சோதனைகளிலும் பங்கேறக்கவில்லை.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்கான T20 அணித்தலைவராக தசுன் சானாக செயல்படவுள்ளார்.
அக்டோபர் , நவம்பரில் இந்தியாவில் இடம்பெறவுள்ள T20 உலக கிண்ண தொடரை இலக்காகவும் கொண்டு இந்த நியமனம் அமையவுள்ளது, ஆயினும் இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபுரவமாக அறிவிக்கவில்லை.