இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக மோடி நியமனம் -பொறுப்புகள் என்ன தெரியுமா ?

இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக மோடி நியமனம் -பொறுப்புகள் என்ன தெரியுமா ?

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பணிப்பாளராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் மூடியை நியமித்துள்ளது .

மார்ச் மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு அமையும் என்று ஶ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் அமைத்த டெக்னிகல் அட்வைசரி கொமிட்டி மூடியை நியமிப்பதற்கு பரிந்துரை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மோடி 2007ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விளையாடியபோது இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார் .

எதிர்கால தொடர்கள் ,உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பு ,பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி ,வீரர்களின் உடல்,உள நலன்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை கண்காணிப்பது மற்றும் பயிற்சியாளர்கள் பயிற்சியாளர்கள் குழு தொடர்பாகவும் தன்னுடைய கவனத்தை செலுத்த உள்ளார் .

வீரர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கண்காணித்து ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பும் மூடிக்கு வழங்கப்பட்டுள்ளது .

மூன்று ஆண்டுகளில் 300 வேலை நாட்கள் எனும் சுதந்திர அடிப்படையில் பணி நியமனம் அமைந்துள்ளது .

மூடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் பணிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.