இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான்..?

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான்..?

 அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள உலக டுவென்டி டுவென்டி தொடருக்கான இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக மக்கலத்தை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தரப்பு உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எதுவும் வெளியிடாவிட்டாலும் கிரிக்கெட் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

குறிப்பாக பிரண்டன் மெக்கலம் கரிபியன் பிரீமியர் லீக் போட்டிகளிலும், இது மாத்திரமல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் அதிரடி ஆட்டக்காரர் மக்கலம் T20 போட்டிகளை இலக்கு வைத்து இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே முன்னாள் இலங்கை வீரர்களான திலான் சமரவீர, ரங்கன ஹேரத் உள்ளிட்ட பலர் வெளிநாட்டு அணிகளின் பயிற்சியாளர்கள் குழாமில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நிலையில்  இலங்கை கிரிக்கெட் வெளிநாட்டவர்களை பயிற்சியாளர்களாக அழைக்கும் ஆர்வத்தை கைவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.