இலங்கை கிரிக்கெட் அணியின் லசித் மாலிங்க திடீர் ஓய்வு..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க சற்றுமுன் அனைத்து வகையான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார், ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற டுவென்டி டுவென்டி போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.
சொந்த காரணங்களால் இலங்கை தேசிய அணியில் விளையாடாமல் இருந்த மாலிங்க, உலக கிண்ண போட்டிகளில் விளையாடும் ஆர்வத்தில் இருந்த நிலையிலேயே திடீர் ஓய்வை அறிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக 4. பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் மலிங்கா மட்டுமே, அவர் ஐந்து சர்வதேச ஹாட்ரிக் சாதனைகளையும் படைத்துள்ளார்- ஒருநாள் போட்டிகளில் மூன்று மற்றும் டி 20 சர்வதேச போட்டிகளில் இரண்டு ஹாட் ரிக் வீழ்த்தியுள்ளார்.
107 விக்கெட்டுகளுடன், மலிங்கா தற்போது டி 20 போட்டிகளில் உலகின் அதிக விக்கெட் எடுத்தவர் எனும் சாதனைக்கு சொந்தக்காரர்.
30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இலங்கையின் டி 20 உலகக் கோப்பை 2021 அணிக்காக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அவரை புறக்கணித்ததால் மலிங்கா ஓய்வு பெற்றதாகவே பேசப்படுகிறது.