இலங்கை கிரிக்கெட் அணியுடன் கைகோர்க்கும் லசித் மாலிங்க ..!

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சு பொறுப்பை மீண்டும் லசித் மலிங்கா அணியிடம் ஒப்படைக்க உள்ளது SLC .!

ஜூன் 7ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவின் இலங்கை சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.

இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியின் முதற்கட்ட போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்திலும் பின்னர் பல்லக்கலே மற்றும் காலி சர்வதேச மைதானங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அணியில் இணையுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதனை மாலிங்கவும்்ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வருடம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராகவும் லசித் மலிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லசித் மலிங்கா முன்னதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பயிற்சியாளராக இருந்தார்,

மேலும் இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

YouTube காணொளிக்கு ?