இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்- சங்கக்கார எனும் மகோன்னத கிரிக்கெட் வீரன் ஓய்வை அறிவித்த நாள்..!

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்- சங்கக்கார எனும் மகோன்னத கிரிக்கெட் வீரன் ஓய்வை அறிவித்த நாள்..!

 இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான குமார் சங்கக்கார இன்றைய நாளில், சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுகத்தார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் சங்கக்கார இன்றைய நாளில் தன்னுடைய இறுதி இன்னிங்சை ஆடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்கக்கார இலங்கை அணிக்காக 15 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி 134 டெஸ்ட் போட்டிகளில் 12 400 ஓட்டங்களை குவித்துள்ளார்.சராசரி 57.40 ஆக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அகராதியில் சங்கக்கார மிகச்சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரராகவும், உலகளாவிய ரீதியில் மிகச்சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்கள் ஒருவராகவும் தன்னை நிலைநிறுத்தினார்  என்பதும் பெருமைப்படத்தக்கதே.

சங்கக்காரவின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியின் போது எடுக்கப்பட்ட நிழல் படங்கள் ???