இலங்கை உலக கிண்ண நட்சத்திரம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…!

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

“இது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடனான ஒரு நம்பமுடியாத பயணமாகும், 2010 ஆம் ஆண்டு முதல் நான் அதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமையடைகிறேன். இந்த அற்புதமான பயணம் முழுவதும் நான் கற்றுக்கொண்ட பல மதிப்புமிக்க பாடங்கள் மற்றும் அழகான நினைவுகள்.

எனது பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று ஜீவன் மெண்டிஸ் ட்வீட் செய்துள்ளார்.

ஆதாரங்களின்படி ஜீவன் மெண்டிஸ் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

38 வயதான கொழும்பு, சென் தோமஸ் கல்லூரியின் முன்னாள் வீர்ரான ஜீவன் மெண்டிஸ் கடைசியாக 2019 ஒருநாள் உலகக் கோப்பையின் போது இலங்கைக்காக விளையாடினார்.