இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தம் -அஞ்சலோ மெத்தியூஸ், சாமிக, அசலங்க இல்லை..!

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தம் -அஞ்சலோ மெத்தியூஸ், சாமிக, அசலங்க இல்லை..!

 இலங்கை கிரிக்கெட் அணியினருக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் இடையில் மிகப்பெரிய முறுகல் நிலையில் இருந்து ஒரு விடயம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

வீரர்கள் சம்பளப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் தொடர்ந்து இழுபறியாக இருந்துவந்த நிலையில் 18 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் தலைவர் ஷானக, டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட 18 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர் .

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் மத்தியூஸ் இணைக்கப்படவில்லை என அறியவருகிறது .

ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் செல்லுபடியாகும் காலமாக ஐந்து மாதங்களுக்கு உரியதாக ஒப்பந்த காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியூஸ் அண்மைக்காலமாக அணியில் விளையாட நிலையில் அவர் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என அறிய வருகிறது ..

அது மாத்திரமல்லாமல் சாமிக கருணாரத்ன, பானுக ராஜபக்ச, நுவான் பிரதீப், பிரவீன் ஜெயவிக்ரம,  அவிஷ்க பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ மற்றும் சரித் அசலங்க உள்ளிட்ட வீரர்களும் இந்த ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்த வீரர்கள் விபரம் ????

1 .தனஞ்சய டி சில்வா
2 .குசல் பெரேரா
3 .திமுத் கருணாரத்ன
4 .சுரங்க லக்மல்
5 .தசுன் ஷானக
6 .வனிந்து ஹசரங்க
7 .லசித் அம்புல்தெனிய
8. .பதும் நிசங்க
9 .லஹிரு திரிமான்ன
10 .துஷ்மந்த சமீர
11 .தினேஷ் சந்திமால்
12 .லக்ஷன் சண்டகன்
13 .விஷ்வா பெர்னாண்டோ
14 .ஓஷதா பெர்னாண்டோ
15 .ரமேஷ் மெண்டிஸ்
16 .லஹிரு குமார
17 .அஷேன் பண்டார
18 .அகில தனஞ்சய