இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் போட்டி கட்டணத்தை 100% அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வீரர்களை ஊக்குவிக்கும் இந்த நடைமுறை வருகிறது.
அதன்படி, புதிய போட்டிக் கட்டணத்தின்படி, ஒரு வீரர் ஒரு டெஸ்ட் போட்டியிலிருந்து $15,000 (சுமார் ரூ. 44 லட்சம்) பெறுவார் என்று சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.