அவிஷ்க, முபாரக், கண்டம்பி, கல்பகே ஶ்ரீ லங்கா கிரிக்கட்டின் முக்கிய பொறுப்புக்களில்…!

இலங்கை கிரிக்கெட் ‘A’ அணி ‘Emerging ‘ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்சியாளர்களை SLC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சற்று முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது.

உயர் செயல்திறன் மையத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் பிரிவுக்கு பின்வரும் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் தேசிய அணி, ‘A’ அணி, Emerging  மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணியில் மேலும் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிய பயிற்சியாளர் நியமனத்துக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நெதர்லாந்து ஆண்கள் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் அன்டன் ரூக்ஸ், 7 மார்ச் 2022 முதல் தேசிய களத்தடுப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

உயர் செயல்திறன் மையம்-High performance centre

அவிஷ்க குணவர்தன – தலைமை பயிற்சியாளர்.

திலின கண்டம்பி – உதவி பயிற்சியாளர்

மலிந்த வர்ணபுர – துடுப்பாட்ட பயிற்சியாளர்

சஜீவ வீரகோன் – பந்துவீச்சு பயிற்சியாளர்.

உபுல் சந்தன – களத்தடுப்பு பயிற்சியாளர்

வளர்ந்து வரும் அணி – Emerging Team

ருவன் கல்பகே – தலைமை பயிற்சியாளர்

ருவின் பீரிஸ் – உதவி பயிற்சியாளர்

தர்ஷன கமகே – பந்துவீச்சு பயிற்சியாளர்

தம்மிக்க சுதர்சன – துடுப்பாட்ட பயிற்சியாளர்

19 வயதிற்குட்பட்டவர்கள் அணி

ஜெஹான் முபாரக் – தலைமை பயிற்சியாளர்

சம்பத் பெரேரா – உதவி / துடுப்பாட்ட பயிற்சியாளர்

சமிலா கமகே – பந்துவீச்சு பயிற்சியாளர்

கயான் விஜேகோன் – களத்தடுப்ப பயிற்சியாளர்