இலங்கை சார்பில் இரட்டை சதம் விளாசிய வீரர்கள் விபரம்…!

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தன்னுடைய முதலாவது இரட்டை சதத்தை இன்றைய நாளில் பூர்த்தி செய்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய 4ம் நாளில் கருணாரத்ன இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். 71 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இவர், தனது 11 வது சதத்தை இரட்டை சதமாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசும் 10 வது வீரராகவும் திமுத் கருணாரத்ன தனது பெயரை பதிந்துள்ளார்.
அத்தோடு இலங்கை அணித்தலைவராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை பூர்த்தி செய்தவர்கள் வரிசையில் திமுத் கருனார்தன 4 வது இடத்தில் காணப்படுகின்றார்.

மஹேல ஜயவர்தன -374
மார்வன் அத்தப்பத்து -249
மஹேல ஜயவர்தன -240
திமுத் கருணாரத்ன-233 *

இலங்கை சார்பில் இரட்டை சதம் விளாசியவர்கள் விபரம்.

அரவிந்த டீ சில்வா
சனத் ஜயசூரிய
ரோஷன் மஹாநாம
மார்வன் அத்தப்பத்து
மஹேல ஜயவர்தன
ஹசான் திலகரத்ன
குமார் சங்கக்கார
திலான் சமரவீர
அஞ்சலோ மத்தியூஸ்
திமுத் கருணாரத்ன