இலங்கை சுற்றுப்பயணம்- தவான் தலைவர், டிராவிட் பயிற்சியாளர் ….?

இந்திய அணி வீரர்கள் இந்த மாத இறுதியில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கே நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற காத்திருக்கிறது.

அதேபோன்று அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த நிலையில் வருகின்ற ஜூலை மாதமளவில் இந்திய அணி இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 T20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இதனால் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியா சார்பில் இளம் வீரர்கள் பலர் விளையாடும் வாய்ப்பு ஏற்படவுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வீரர்களின் பட்டியலை BCCI அண்மையில் வெளியிட்டது. மொத்தம் 24 வீரர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி விபரம்.

ரோகித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரகானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, மொஹம்மட் சமி, மொஹம்மட் சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல் , விரித்திமான் சஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் இவர்களை விடுத்து மேலதிக வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் அர்சன் நகர்ஸ்வல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆகையால் இவர்களை விடுத்து அடுத்த தெரிவு நிலையில் உள்ள வீரர்களை இணைத்துக்கொண்டு இந்திய அணி தவான் தலைமையில் விளையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன,அதேநேரம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

இலங்கை சுற்றுப்பயணத்தில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள்.

பிரித்வி ஷா, ஷிகர் தவான், தேவுத்துட் படிக்கல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, ருத்ராஜ் கெய்க்வாட் , ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா, ராகுல் தெவாட்டியா, விஜய் சங்கர், புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், நவ்தீப் சைனி, ஹர்ஷால் பட்டேல், கார்த்திக் தியாகி, கலீல் அஹமெட் , சகாரியா, வருன் சக்கரவர்த்தி, சஹால், குல்தீப் யாதவ் மற்றும் ராகுல் சஹர் ஆகிய வீரர்கள் விளையாடக்கூடும் எனவும் நம்பப்படுகின்றது.