இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே- அட்டவணை..!

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே- அட்டவணை..!

இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி இலங்கை செல்லவுள்ளது.

அதன்படி இரு அணிகலுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டி ஜனவரி 16ஆம் தெதியும், இரண்டாவது போட்டி ஜனவரி 18ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஜனவரி 21ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கண்டியிலுள்ள பல்லகெலே மைதானத்தில் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை அணி வருகிற பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதால், இத்தொடர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#Abdh