பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டினார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 10,000 ரன்களை கடந்தார். பாபர் அசாம் 228 இன்னிங்ஸ்களில் விளையாடி 10,000 சர்வதேச ரன்களை எட்டியுள்ளார்.
அதன்படி, இதற்கு முன் 232 இன்னிங்ஸ்களில் 10,000 சர்வதேச ரன்களை கடந்த விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் கைப்பற்றினார். 10,000 சர்வதேச ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றார்.
10,000 ரன்களை மிக வேகமாக கடந்த ஆசிய வீரர்கள் பட்டியல்?
பாபர் அசாம் – 228 இன்னிங்ஸ்
விராட் கோலி – 232 இன்னிங்ஸ்
சுனில் கவாஸ்கர் – 243 இன்னிங்ஸ்
ஜாவேத் மியான்டட் – 248 இன்னிங்ஸ்
சவ்வுரவ் கங்குலி – 253 இன்னிங்ஸ்
10000 ரன்களை வேகமாக பெற்ற சர்வதேச வீரர்கள் பட்டியல் ?
விவியன் ரிச்சர்ட்ஸ் – 206 இன்னிங்ஸ்
ஹசிம் ஆம்லா – 217 இன்னிங்ஸ்
பிரையன் லாரா – 220 இன்னிங்ஸ்
ஜோ ரூட் – 222 இன்னிங்ஸ்
பாபர் அசாம் – 228 இன்னிங்ஸ்