நட்சத்திர இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளரான தீபக் சாஹர் ஆகியோர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஊடக அறிக்கைகளின்படி, இந்த இரண்டு வீரர்களும் டி20 ஐ தொடரின் தொடக்கத்தின் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர், எனவே அவர்கள் முழு தொடருக்கும் பங்களிப்பு நல்க முடியாது போயுள்ளது.
அறிக்கைகளின்படி, தீபக் சாஹர் இந்திய அணியுடன் லக்னோவுக்குச் செல்லவில்லை, இப்போது அவர் NCA தேசிய கிரிக்கெட் அக்கடமி செல்ல தயாராகிவிட்டார். சூர்யகுமார் யாதவைப் பொறுத்த வரையில், “இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். செவ்வாயன்று லக்னோவில் நடந்த இந்தியாவின் பயிற்சி அமர்வில் அவர் பங்கேற்றார்,
ஆனால் 31 வயதான பேட்ஸ்மேனின் கையில் முறிவு ஏற்பட்டதால் அவராலும் தொடரில் பங்கேற்க முடியாது போயுள்ளமை குறிப்பிடத்த்கது.
ஏற்கனவே இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரிஷாப் பான்ட் ஆகிய வீரர்களுக்கு அணி நிர்வாகம் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், இப்போது அணியின் பிரதான வீரர்களாக கருதப்படும் சூர்யகுமார் யாதவ் மற்றும் பந்துவீச்சாளர் தீபக் சஹார் ஆகியோர் இலங்கை தொடரை தவறவிடுகின்றமை இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதில் ஆச்சரியமில்லை.