இலங்கை தேசிய அணியில் டில்ஷான் …?

இலங்கை தேசிய அணியில் டில்ஷானை இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனும் அளவுக்கு டில்ஷான் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்தியாவில் இடம்பெற்றுவரும் வீதி விழிப்புணர்வு T20 தொடரில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் தலைவராக டில்ஷான் செயல்பட்டு வருவதோடு சகலதுறைகளிலும் ஜொலித்து வருகின்றார்.

நேற்று இடம்பெற்ற இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணியுடனான போட்டியில் பந்துவீச்சில் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், துடுப்பாட்டத்தில் 26 பந்துகளில் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை டில்ஷான் பெற்றுக்கொண்டார்.

இந்த தொடரில் அதிக விக்கெட்களையும், அதிக ஓட்டங்களையும் குவித்தவர் டில்ஷான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 44 வயதிலும் அதீத திறமையை வெளிப்படுத்திவரும் டில்ஷானை இலங்கையின் தேசிய அணியில் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனும் அளவுக்கு இன்றளவும் திறமை கொட்டிக்கிடக்கின்றமை சிறப்பம்சமே.,

Previous articleகிஷான் அதிரடி- சோகத்தில் தவான் ..! (மீம்ஸ்)
Next articleதிருமலை, சல்லி மாணவன் சாதனை..!