இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தடுப்புச் சுவர் மன்னார் மைந்தன் டக்சன் உயிர் பிரிந்தது..!

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தடுப்புச் சுவர் மன்னார் மைந்தன் டக்சன் உயிர் பிரிந்தது..!

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தடுப்புச் சுவர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த டக்சன் பியூஸ்லஸ் இன்று மாலைதீவில் மரணமானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இலங்கையில் மாகாணங்களுக்கிடையிலான போட்டிகள் தற்சமயம் இடம்பெற்று வந்தாலும் ,கழகமட்ட போட்டிகளுக்காக மாலைதீவில் தொழில்சார் கழக மட்டப் போட்டிகளில் டக்சன் விளையாடியவர்.

இந்த நிலையில் இன்றைய நாளில் தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன, ஆனாலும் அவரது குடும்பத்தாரதும், உறவினர்களதும் நெருங்கிய நண்பர்களது தகவல்களின் அடிப்படையில் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த ஒரு காரணமும் அல்லது தேவையும் இல்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.

தொழில்சார் கால்பந்து உலகில் ஏற்பட்டிருக்கும் போட்டி நிலமையும், சிலரது ஆசைகளுக்கும் அல்லது சிலரது நிபந்தனைகளுக்கும் அடிபணிய மறுத்தமையும் இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் நண்பர்களது தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

 

எது எவ்வாறாயினும் மிக நீண்ட காலமாக இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் வெற்றிகரமான தமிழ் பேசும் வீரர் என்ற பெருமை பெற்று அனைத்து கால்பந்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட டக்சனது மரணம் அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்தமான இலங்கை கால்பந்தை நேசிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் கவலையும் பேரிழப்பை ஏற்படுத்திய செய்தி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இனிமேலாவது கிரிக்கெட்டை நாம் கொண்டாடும் அளவிற்கு கால்பந்தையும. இலங்கையில் கொண்டாடுவோம்.