இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை வெளியீடு…!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை வெளியீடு…!

இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியை இன்றைய நாளில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

ஜனவரி மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடருடன் சொந்த மண்ணில் தொடங்கும் போட்டிகளைத் தொடர்ந்து இலங்கை அணி ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும்.

ஆஸ்திரேலிய தேசிய அணி ஜூன் – ஜூலை 2022 இல் கிரிக்கெட் தொடருக்காக இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆகஸ்ட்-செப்டெம்பர் 2022 இல் இலங்கை ஆசிய கோப்பை போட்டிகளை சந்திப்பதற்கு முன்னர் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளிலும், 2 T20 போட்டிகளிலும் விளையாடும்.அதன்பின்னர் ஆசையாக கிண்ண T20 போட்டிகள் ஆகஸ்ட் ,செப்டெம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.

ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து,அக்டோபேர் , நவம்பர் மாதங்களில் 2022 ஐசிசி ஆடவர் T20 உலகக் கோப்பையில் பங்கேற்க இலங்கை அணி ஆஸ்திரேலியா செல்கிறது.

தேசிய அணி 2022 ஆம் ஆண்டிற்கான அதன் கடுமையான சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியை இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்துடன் முடிக்கும், 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை அணியின் சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டி, எமது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கப் போகிறது என இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

“திட்டமிடப்பட்ட கிரிக்கெட் நாட்காட்டியை நாங்கள் வெற்றிகரமாக முடிக்க முடிந்தால், அது இலங்கையில் விளையாட்டுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும், உலக அரங்கில் எங்கள் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும், மேலும் எங்கள் பங்காளிகளுக்கு மதிப்புமிக்க வெளிப்பாடுகளை வழங்கும்,” என்று அவர் கூறினார்.