இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைய உங்களுக்கும் அழைப்பு..!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைய உங்களுக்கும் அழைப்பு..!

திறமைகளை கொண்ட வீரர்களுக்கு இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயல் திட்டம் ஒன்றினை ஶ்ரீ லங்கா கிரிக்கெட்  ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய வளர்ச்சிப் பயணத்திற்கான வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக கிராமத்துக்கு கிரிக்கெட் என்ற தொனிப்பொருளில் இத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் முதல் கட்டம் பொலனறுவை மாவட்டத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

திறமையுடையவர்களை இனங்கண்டு அவர்களை தேசிய அணிக்குள் இணைத்துக்கொள்வதே இந்த செயல் திட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

எமது YouTube தளத்துக்கு செல்வதற்கு 👇