இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு முறை குறித்து தமது விசனத்தை இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான டில்ஷான் மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான உலக கிண்ண போட்டிகள் நடைபெறவிருக்கும் இந்த ஆண்டில், இந்தமாதிரியான முடிவுக்கு தேர்வாளர்கள் சென்றமை ஆரோக்கியமல்ல என்பது அவர்களது கருத்தாகும்.
டில்ஷான் கருத்துப்படி, மத்திய வரிசையில் மத்தியூஸ் அல்லது திரிமான்ன ஆகிய இருவரில் ஒருவரையாவது சேர்த்திருக்க வேண்டும் எனும் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
திடீரென சிரேஷ்ட வீரர்கள் பலரை அணியிலிருந்து நீக்கிவிட்டு இளையவர்களை மட்டும் அணியில் சேர்ப்பது நல்ல விடயமல்லவெனவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குசல் பெரேரா தலைமையில் பங்களாதேஷ் சென்ற இலங்கை அணி தொடரை 2-1 என்று இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.