இலங்கை தொடரில் சிரேயாஸ் ஐயர் விளையாடுவாரா- BCCI தகவல்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவராக இடம்பிடிக்க போராடும் இளம் வீரர் சிரேயாஸ் ஐயர், இலங்கையுடனான போட்டிகளில் விளையாடுவாரா என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான தொடரின் போது உபாதைக்குள்ளான சிரேயாஸ் ஐயர், IPL போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை, இதனால் டெல்லி அணியின் தலைமைத்துவத்துக்கும் பான்ட் நியமிக்கப்பட்டிருந்தார்.

இப்போது இலங்கை செல்லவுள்ள இந்திய அணியிலும் சிரேயாஸ் ஐயர் , உபாதை குணமாகாத நிலையில் விளையாட வாய்ப்பில்லை என்று BCCI வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

ஏப்ரல் 8 ம் திகதி தோள்பட்டை உபாதைக்காக சத்திர சிகிச்சை மேற்கொண்ட சிரேயாஸ் ஐயர், குறைந்தது 3 மாதங்களாவது ஓய்விலிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஜூலை மாதம் 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜூலை 13 தொடக்கம் 27 வரை குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.