இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் முக்கிய பொறுப்பில் சுசந்திகா நியமனம்…!

பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அவருக்கு “மகளிர் கிரிக்கெட் ஆலோசனை மற்றும் மேம்பாட்டு” பொறுப்புக்கான ஆலோசகர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது நியமனம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

“இந்த புதிய சவாலில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இளம் வீரர்கள் விளையாட்டில் முன்னேற்றம் அடையவும், சவால்களை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் அவர்களின் நட்சத்திரப் பயணத்தில் அவர்களுக்கு உதவவும் இது எனக்கு வாய்ப்பளிக்கிறது என சுசந்திகா ஜயசிங்க தெரிவித்தார்.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇