உலகின் நம்பர் 1 டெஸ்ட் வீர்ரான மார்னஸ் லாபுஷாக்னே, ஆஸ்திரேலியா அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கும், ஜூன் மாதம் இலங்கைக்கும் செல்வதற்கு முன்பு, சுழல் பந்தை எதிர்கொள்வதற்காக தனது தனித்துவமான பயிற்சி முறையை உருவாக்கியுள்ளார்.
லாபுஷாக்னே துணைக்கண்ட (Subcontinent) பாணி ஆடுகளத்தை தனது வீட்டின் எல்லைப்புறத்தில் உருவாக்கி பயிற்சிசகய்வது போன்ற அதன் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார்.
அவுஸ்திரேலிய அணி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
மார்ச் மாதம் 4ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள அனைத்து வகையான தொடர்களிலும் அவுஸ்திரேலியாவின் இந்த பயணம், அதன் பின்னர் ஜூன் மாதத்தில் இலங்கை சுற்றுப்பயணம் ஆகியவற்றை இலக்குவைத்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் போன்ற ஒன்றை உருவாக்கி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
வீடியோ இணைப்பு ?
Annnd the batting video pic.twitter.com/6IQpqyvlsC
— Marnus Labuschagne (@marnus3cricket) February 17, 2022