இலங்கை-மேற்கிந்திய தீவுகள் தொடர் இடம்பெற வாய்ப்பு.

இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு உள்ளது என்று அறியப்படுகிறது.

இந்த சுற்றுலா திட்டமிட்டதை விட கொஞ்சம் தாமதமாக நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பப்படுகின்றது. முன்னதாக இந்த தொடர் 18 ம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் ஆரம்ப வீரர் திரிமான்ன ஆகியோருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதை அடுத்தே, மேற்கிந்திய தீவுகள் சுற்றுலா நடைபெறாது என முன்னர் அறிவிக்கப்பட்டது.

இப்போது சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைத்து வீரர்களும், இன்று புதன்கிழமை தங்களை பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் , முடிவுகள் வியாழக்கிழமை அறியப்படும் அதன்பின்னர் முடிவெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பு கூறுகிறது.

டெஸ்ட் போட்டிகள் WTC -உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இன் ஒரு பகுதியாகும், அவற்றை நாங்கள் விளையாடுவோம் என்று எதிர்பார்க்கிறோம் என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ் கூறியுள்ளார்.

இன்று காலை SLC யுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னரே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டில் இருந்து இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகவே இந்த தொடர் இடம்பெற வாய்ப்பிருப்பதாக மேற்கிந்திய கிரிக்கெட் சபை செய்திகள் குறிப்பிடுகின்றன.