இலங்கை ரசிகர்களுக்கு நற்செய்தி- மீண்டும் தசுன் சானக்க..!

இலங்கை கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான T20 போட்டிகளுக்கான தலைவராக அறிவிக்கப்பட்ட தசுன் சானக்க கடவுசீட்டு சிக்கல் காரணமாக இலங்கை அணியோடு பயணிக்கவில்லை.

இந்தநிலையில் பிரான்ஸ் வழியாக இலங்கை குழாமோடு தசுன் சானக்க மேற்கிந்திய தீவுகள் பயணப்பட உள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தசுன் சானக்க மேற்கிந்திய தீவுகள் பயணப்பட்டு, ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.