இலங்கை வன்முறைகள்: உயிரிழந்த மற்றும் சேத விபரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது ..!
இலங்கையில் நேற்று (09) ஏற்பட்ட அமைதியின்மையில் அதிகமான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பதிவாகியுள்ளன.
இன்று(10) காலை 6 மணி நிலவரப்படி இந்த சம்பவத்தில் இதுவரை குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 220 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
47 வாகனங்களும் 38 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், 41 வாகனங்களும் 65 வீடுகளும் சேதமடைந்துள்ளன.