இலங்கை வரும் அவுஸ்திரேலியா- தலைவராகும் திமுத்…

இலங்கை வரும் அவுஸ்திரேலியா- தலைவராகும் திமுத்…!

இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இதற்கு முன்னர் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டவர்.

அந்த காலகட்டத்தில், இலங்கை அவர் தலைமை தாங்கிய 16 போட்டிகளில் 10 வெற்றிகளை வென்றது, பல போட்டிகளை வெற்றிகளுடன் முடித்தது.

திமுத் அணியை வழிநடத்த வேண்டுமாயின் முதலில் அவரை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அதிகாரிகள் தலைமைத்துவம் தொடர்பான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணியின் பயிற்சியாளராக சில்வர்வூட், உதவி பயிற்சியாளராக நவீத் நவாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டு பயிற்றுவிப்பஉ குழுவில் மாற்றங்கள் எழுந்துள்ள நிலையில் இலங்கையின் ஒருநாள் போட்டிகளுக்கான அணி தலைமையை மீண்டும் திமுத் கருணாரத்னவிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

காணொளியைப் பாருங்கள் & Subscribe செய்யுங்கள் ?