இலங்கை வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் விபரம்- டிக்கா, தனஞ்சய முன்னிலையில்…!

இலங்கை கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் வீரர்கள் காட்டிய திறமையினை அடிப்படையாக கொண்டு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தமது ஒப்பந்த பட்டியலை தயாரித்துள்ளது.

அதனடிப்படையில் வீரர்களை ABCD ஆகிய 4 வகையான தரநிலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளனர், அதிலும் குறிப்பாக A ஒப்பந்த தரநிலை பெறும் வீரர்களும் அதிலேயே A1 ,A2 ,A3 ,A4 எனும் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதிலே அதிக தொகை சம்பளமாக நிரோஷான் டிக்வெல்ல மற்றும் தனஞ்சய டீ சில்வா ஆகியோர் A1 தர நிலையில் 1 லட்சம் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர் ( அண்ணளவாக இலங்கை மதிப்பில் 2 கோடி )

 

 

 

 

 

 

 

 

 

மத்தியூஸ் 130,000 அமெரிக்க டொலரிலிருந்து 80,000 அமெரிக்க டாலராக குறைக்கப்பட்ட பின்னர் 50,000 அமெரிக்க டாலர்களை இழப்பார். அவர் அடுத்த மாதம் 34 வயதை எட்டவுள்ளார் , அடிக்கடி உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றமையும் இதற்கான காரணமாக இருக்கலாம்.

இந்த ஆண்டு டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் சிறந்த முன்னேற்றம் கண்ட திமுத் கருணாரத்னாவுக்கு 30,000 அமெரிக்க டாலர் ஊதியக் குறைப்பு வரவுள்ளது . கருணாரத்ன தனது முந்தைய ஒப்பந்தமான 100,000 அமெரிக்க டாலருடன் இணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவரது ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது 70,000 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

முந்தைய ஆண்டு 100,000 அமெரிக்க டாலர் சம்பாதித்து முதல் அடுக்கில் இருந்து இரண்டாம் வகைக்கு தரமிறக்கப்பட்ட 45,000 அமெரிக்க டாலர் ஊதியக் குறைப்பையும் சுரங்கா லக்மல் பெறவுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இளம் வீரர் பத்தும் நிஸ்ஸங்க எல்லோரும் ஆச்சரியமுயூட்டும் வகையில் ஒப்பந்த தரநிலையைப் பெறவுள்ளார்.

இதுவரைக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பு இந்த ஒப்பந்தத்தை ஒப்பந்தம் செய்யவில்லையாயினும் இந்த பட்டியல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.