இலங்கை வீரர்களுக்கு புதிய உடற்தகுதி விதிமுறைகள்-சிக்கிய சிங்கங்கள்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு உடற்தகுதி பிரச்சனை அண்மைக் காலமாக அதிக பேசுபொருளாக இருந்து வருகின்றது.

கடந்த தென் ஆபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான இரு தொடர்களில் வீரர்கள் அதிக உபாதைகளை சந்தித்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமது உடற் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் பிரகாரம் ஒவ்வொரு வீரருக்கும் 2 கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடம் 35 செக்கன்களில் ஓடி முடிக்க பணிக்கப்பட்டுள்ளது.

இப்படி அவர்கள் தமது உடல்தகுதியை நிரூபிக்க தவறினால் அவர்களுக்கு தமது உடல்தகுதியை நிரூபிக்க 40 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

அந்த 40 நாள் கால அவகாசத்தில் அவர்கள் தமது தகுதியை நிரூபிக்க தவறும் பட்சத்தில் அணித்தேர்விலிருந்து விலக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான கடுமையான உடற்தகுதி சோதனைகள் அணியை கட்டியெழுப்பவும், வீரர்கள் சிறப்பாக செயல்படவும் உதவிபுரியும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

எதிர்வரும் 5 ம் திகதி வீரர்களுக்கான முதல்கட்ட உடல்தகுதி சோதனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.