இலங்கை வீரர்கள்-முன்னாள் வீரர்கள் போட்டி விபரம் வெளியானது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கண்காட்சிப் போட்டியொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த அறிவித்தலை விடுத்திருந்தாலும் காலம், நேரம் அறிவிக்கப்படவில்லை.

குறித்த போட்டியானது அடுத்த மாதம் 5ம் திகதி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.