இலங்கை A அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்..!
இலங்கை A அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் ரமேஸ் ரட்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாகிஸ்தான் A அணி இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ளதாக இன்று காலை அறிவித்தது.
4 நாட்கள் கொண்ட 2 உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டியும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையிலேயே என்பது இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஸ் ரட்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக அவிஸ்க குணவர்தன செயற்ப்பட்டு வரும் நிலையில் இவரது நியமனமும் அமைந்துள்ளது.