இல்ங்கை தொடர் – ரோஹித் தலைவர், சிரேஸ்ட வீர்ர்களுக்கு அணியில் வாய்ப்பில்லை…!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கப்பட்டுள்ளது, சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக இரண்டு மூத்த வீரர்களும் மிக நீண்டகாலமாக டெஸ்ட்டில் சொதப்பி வந்தனர், தொடர் வாய்புக்களுக்கு பின்னர் அவர்கள் அணியிலிருந்து ஒதுக்கப்பட்டனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், ஆனால் அவர் தொடரில் விளையாடுவது உடற்தகுதிக்கு உட்பட்டது. புதுமுக இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமாருக்கான அழைப்பும் இருக்கும் அதே வேளையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரும் உடல்தகுதி பெற்ற பிறகு அணிக்குத் திரும்புகின்றனர்.

கே.எல்.ராகுலும் அவரது உடற்தகுதி தொடர்பான நிலமையால் அணியில் இணைக்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடருக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா, இலங்கைக்கு எதிரான தொடருக்கான டெஸ்ட் மற்றும் T20I அணிகளின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

T20I தொடரில், விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஓய்வு பெற்றனர், ஜடேஜா T20I அணிக்கை திரும்பினார். சஞ்சு சாம்சன் T20 அணிக்கு திரும்ப இணைக்கப்பட்டுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24 முதல் 27 வரை லக்னோ மற்றும் தர்மசாலாவில் நடைபெறுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மொஹாலி மற்றும் பெங்களூருவில் மார்ச் 4 முதல் 16 வரை நடைபெறும்.

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (தலைவர்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில், ரிஷப் பந்த் (WK.), கே.எஸ்.பாரத் (WK), ஆர்.அஷ்வின் (உடற்தகுதிக்கு உட்பட்டு), ரவீந்திர ஜடேஜா , ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா (உதவ தலைவர்), முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.

இந்திய டி20 அணி:

ரோஹித் சர்மா (தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா ஜஸ்பிரிட் பும்ரா (உதவ தலைவர்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜடேஜா, சஞ்சு சாம்சன், , யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான்.