இளம் அணியின் வெற்றிக்கு வழிவிட்ட டோனி & CSK …!

14 வது IPL தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

இன்றைய போட்டியில் சென்னை அணித்தலைவர் டோனி , இளம் வீரர் அவேஷ் கான் பந்து வீச்சில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தார்.
2015 ம் ஆண்டுக்கு பின்னர் டோனி இப்படி டக் அவுட் இல் அட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெய்னா அரைச்சதமடித்தார்.

பதிலுக்கு ஆடிய டெல்லி அணிக்கு ஆரம்ப வீரர்களான ப்ரித்வி ஷா , தவான் ஆகியோர் 133 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பெற்றுக்கொடுத்தனர்,
தவான் 88 , ப்ரித்வி ஷா 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க டெல்லி அணி இன்றைய போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாளை சென்னை மைதானத்தில் கொல்கொத்தா மற்றும் சன் ரைசேர்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.,