இளம் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்_ இந்திய அணியின் உதவித் தலைவராக பதவி உயர்வு..!
இந்தியாவிற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவு பெற்றுள்ளது .
மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3_0 என தொடரைக் கைப்பற்றியது.
அடுத்து டுவென்டி டுவென்டி தொடர் இடம்பெறவுள்ள நிலையில், இந்தியாவின் உதவித் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த லோகேஷ் ராகுல் உபாதையால் அணியல் இருந்து விலக்கப்பட புதிய உதவிதலைவராக பான்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேப்பிடல் ஐபிஎல் போட்டிகளுக்கான தலைவராக செயற்படும் ரிஷாப் பாண்ட் மிகச் சிறந்த தலைமைத்துவ பண்புகள் கொண்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.