இளம் வீரர்களுக்கு வாய்ப்பு- மிக்கி ஆர்தர் கருத்து…!

நாளை அன்டிகுவாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு பின்னர் இலங்கை முதல் டி 20 போட்டியில் விளையாடும்போது புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனும் கருத்து பயிற்சியாளர் மிக்கி ஆர்தரிடம் இருந்து வெளியாகியுள்ளது.

உடற்தகுதி சோதனைகளில் தோல்வியுற்ற தொடக்க ஆட்டக்காரர்களான குசல் ஜானித் பெரேரா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ, மற்றும் சகலதுறை வீரர் தனன்ஜய டி சில்வா மற்றும் இசுரு உதனா ஆகியோர் காயங்களுடன் அணிக்கு வெளியே உள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட T20 போட்டிகளுக்கான அணித்தலைவர் தசுன் ஷானகா, 2018 ல் கடவுசீட்டை இழந்ததால் மீண்டும் அணியில் சேர முடியவில்லை, இதனால் அவர் அமெரிக்காவிற்கு புதிய விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டது, இப்போது அவர் முழு T20 தொடரையும் தவறவிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் முதன் முறையாக தேசிய அணிக்கு அழைக்கப்பட்ட பத்தும் நிசங்கா, ஆஷென் பண்டாரா மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோரை அணியில் சேர்த்துள்ளது இலங்கை அணி , அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அறிமுகமான ரமேஷ் மெண்டிஸ் 20 பேர் கொண்ட T20 அணியில் இடம்பிடித்துள்ளார் .

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வலுவான திறமையை வெளிப்படுத்தி , இந்தியாவில் நடைபெறும் T20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் புதியவர்களைக் காணும் சந்தர்ப்பம் கிட்டும் என்று இலங்கையின் தலைமை பயிற்சியாளர் ஆர்தர் கூறினார்.

“எங்கள் சிறந்த 11 எது, எங்கள் சிறந்த 15 வீரர்கள் யாரென்பது குறித்து தேர்வாளர்களுடன் எனக்கு ஒரு நல்ல யோசனை கிடைத்துள்ளது.

“அணியைச் சுற்றி ஒரு நல்ல உணர்வு இருக்கிறது, மீண்டும் நான் சொல்வது போல், அடுத்த இரண்டு மாதங்களில் T20 உலகக் கோப்பை அணியில் ஒரு வாய்ப்பைப் பெற இதிலே தகுதியானவர்கள் யார் என்பதை எங்களுக்குக் காண்பிப்பதற்கான வாய்ப்புகள் இளைஞர்களுக்கும் சில மூத்த வீரர்களுக்கும் காணப்படுகிறது எனவும் ஆர்தர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை மலிங்கா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது என்றும் ஆர்தர் கூறினார்.

இலங்கையின் இறுதி T20 ஐ தொடர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சொந்த மண்ணில் இடம்பெற்ற போது இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் தோற்றது.

இந்த நிலையில் நாளை ஆரம்பிக்கவுள்ள தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது, இலங்கை நேரப்படி அதிகாலை 3:30 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.