இளையோர் உலகக்கிண்ணத்தில் கலக்கும் ஆசிய அணிகள்- கால் இறுதி போட்டி அட்டவணை வெளியீடு…!
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் இளையோர் உலகக்கிண்ணப் போட்டிகளில் ஆசிய அணிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
16 அணிகளுக்கிடையிலான போட்டிகளின் அடிப்படையில் குழுநிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இப்போது 8 அணிகள் கால் இறுதி ஆட்டங்களுக்கு தேர்வாகியுள்ளன.
இதனடிப்படையில் ஆசிய அணிகள் 5 காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 5 ஆகிய அணிகளும் இங்கிலாந்து, அவுஸ்ரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கால் இறுதி ஆட்டங்களுக்கு தேர்வாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது .
அதிகமாக ஆசிய அணிகளில் ஒன்று இம்முறை கிண்ணத்தை சுவீகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர், இலங்கை, இந்திய அணிகள் உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியான ஆதிக்கத்தை இந்த ஆண்டில் நிலைநாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இதுவரை நான்கு கிண்ணங்களை தன்னகத்தே கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இங்கிலாந்து vs தென் ஆபிரிக்கா -ஜன 26
இலங்கை vs ஆப்கானிஸ்தான் _ஜன 27
பாகிஸ்தான் vs அவுஸ்திரேலியா -ஜன 28
இந்தியா vs பங்களாதேஸ் _ஜன 29