இளையோர் உலகக்கிண்ணம் _அரை இறுதியை மயிரிழையில் தவறவிட்ட இலங்கை அணி, தவறு எங்கே ?

இளையோர் உலகக்கிண்ணம் _அரை இறுதியை மயிரிழையில் தவறவிட்ட இலங்கை அணி, தவறு எங்கே ?

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளின் காலிறுதி ஆட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

நேற்று இடம்பெற்ற விறுவிறுப்பான பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தலைவர் ஆப்கானிஸ்தான் அணியை துடுப்பாட பணித்தார்.

ஆரம்பம் முதலே மிகப்பெரிய சரிவை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி 134 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது, ஆயினும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நூர் அஹமத் 4 சிக்சர்களை விளாசிய காரணத்தால் அவருடைய 30 ஓட்டங்கள் பங்களிப்போடு 134 ஓட்டங்களை ஆப்கான் எட்டிப் பிடித்தது. ரான்புல் 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

135 எனும் இலகுவான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் என்றே எல்லோரும் நம்பினர், ஆனால் இலங்கை வீரர்களின் கவனக்குறைவு ,போட்டியில்  நான்கு ரன் அவுட் முறை மூலமாக ஆட்டம் இழப்புகள் இலங்கை இளைஞர்களின் கனவை ஒட்டுமொத்தமாய் சிதைத்தது .

45 ஓட்டங்களுக்கே இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்தது, ஆடுகளத்துக்கு அணித்தலைவர் துணித் வெல்லலகே வருகின்றபோது வெற்றிக்கு 90 ஓட்டங்கள் தேவையாக இருந்தது, 3 விக்கட்டுகள் மட்டுமே கையிருப்பில் இருந்தன.

ஆயினும் வெல்லலகே, டி சில்வா ஆகியோர் இணைந்து அற்புதமான இணைப்பாட்டத்தையும் பெற்றுக் கொடுத்தனர், 23 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது வெல்லகே ஆட்டமிழந்தார்.

இறுதியில் கடுமையான போட்டியை காண்பித்த இலங்கை அணி 4 ஓட்டங்களால் தோல்வி பெற்றது , இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று இளையோர் உலகக்கிண்ணத்தின் அரை இறுதி ஆட்டத்துக்கு எட்டியது.

இந்த அணியின் ஆலோசகராக மஹேல ஜெயவர்தன, தலைமை பயிற்சியாளராக அவிஸ்க குணவர்த்தனவும், களத்தடுப்பு  பயிற்றுவிப்பாளராக உபுல் சந்தன, பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சசித் பத்திரண ஆகியோர் இலங்கை அணியை வழிநடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக இலங்கை விளையாடியிருந்தமை பெருமைப்படத்தக்கதே.