இஷன் கிஷனை தேற்றி ஆறுதல்படுத்திய கோலி- வைரலாகும் வீடியோ …!

இஷன் கிஷனை தேற்றி ஆறுதல்படுத்திய கோலி- வைரலாகும் வீடியோ …!

14வது ஐபிஎல் தொடரில் நேற்று இடம்பெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அனைவருமே தொடர்ச்சியாக சொதப்ப மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றி பெற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது.

இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைத் தழுவியது, இந்த போட்டியில் நேற்று இந்தியாவின் உலக கிண்ண அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இளம் வீரர்களான இஷன் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகிய வீரர்கள் தொடர்ச்சியாக தடுமாறுகின்றனர்.

இந்த நிலையில் நேற்றும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இஷன் கிஷனை போட்டிக்குப் பின்னர் நேரடியாக சென்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி  ஆறுதல் படுத்திய , உற்சாகப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

ஐபிஎல் என்பதையும் தாண்டி இந்திய அணியின் அடுத்துவரும் உலக்கிண்ண போட்டிகளை இலக்காக கொண்டு விராட் கோலியின் இந்த நடவடிக்கை நேற்று மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது.

கோலி ஒரு சிறந்த தலைவர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் எனலாம்.

வீடியோவைப் பாருங்கள்.

????